முத்திரை தாள் விற்பனையாளராக விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10ம் தேதி கடைசி நாள்..

இராமநாதபுரம் மாவட்டத்தில் 43 இடங்களுக்கு முத்திரைத்தாள் விற்பனையாளர் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  இராமநாதபுரம் இணை சார் பதிவகம் எண் 2, போகலூர் தலா 1, கீழக்கரை 6, ராமேஸ்வரம் 5, கமுதி 4, முதுகுளத்து£ர் 4, அபிராமம் , சாயல்குடி, கடலாடி , ஆர்.எஸ்.மங்கலம் தலா 3 என மொத்தம் 43 இடங்களில் முத்திரைத்தாள் விற்பனையாளர் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

முத்திரை சட்ட விதி 25(1)(சி) படி முத்திரைத்தாள் விற்பனையாளர் பணியிடங்களுக்கான தகுதிகள்  கீழ்கண்டவாறு:-

-எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும், 

-18 வயது முதல் உச்ச வயதில்லை. முத்திரைத்தாள் விற்பனையில் முன் அனுபவம், உரிமம் கோரும் பகுதிக்கான  தாசில்தார் வழங்கிய இருப்பிடச் சான்று, உடல் தகுதி காண்(கண் பார்வை நிலை உட்பட) 

-அரசு டாக்டர் வழங்கிய சான்று, சொத்து மீதான செல்வ நிலை சான்று(தாசில்தார் வழங்கியது).

-பிணையமாக காட்டப்படும் சொத்து மீது வில்லங்கம் இல்லை என உரிய பதிவு அலுவலர் வழங்கிய சான்று

ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். முன்னாள் ராணுவத்தினர், பொது பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் (உரிய சான்று வழங்கியது) ஆதி திராவிடர், பழங்குடியினர் (தாசில்தார் வழங்கியது) விதவைகள்(தாசில்தார் வழங்கியது) ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ராமநாதபுரம், வண்டிக்காரத்தெருவில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் வழங்கப்படும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஆக., 10 மாலை 5:45 மணிக்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட பதிவாளர் அலுவலகம் மற்றும் இதர அரசு அலுவலக அறிவிப்பு பலகைகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.