இன்று தமிழகத்தில் SSLC தேர்வு தொடங்கியது – இஸ்லாமியா பள்ளி தாளாளரின் உத்வேக அறிவுரை..

இன்று தமிழகத்தில் மொத்தம் 6,89,800 மாணவச் செல்வங்கள் SSLC பொதுத்தேர்வில் பங்கேற்கிறார்கள். தேர்வை முன்னிட்டு பரிட்சை தொடங்கும் முன்பு இஸ்லாமியா பள்ளியின் தாளாளர் MMK. முகைதீன் இப்ராஹிம் மாணவர்கள் மத்தியில் சிறப்பு உரையாற்றினார்.

அவருடைய உரையில் மாணவர்களுக்கு நம்பிக்கை விதைக்கும் விதமாகவும், மனதில் உள்ள அச்சத்தை போக்கும் விதமாகவும் உற்சாகத்தை வழங்கினார்.

இந்நிகழ்ச்சயில் பள்ளி ஆசிரியர் அனைவரும் கலந்து கொண்டார்கள். பின்னர் மாணவர்கள் பிரார்த்தனையுடன், உத்வேகத்துடன் பரிட்சை எழுத சென்றார்கள். பள்ளி நிர்வாகத்துடன் கீழை நியூஸ் நிர்வாகமும் மாணவர்கள் வெற்றி வாகை சூட வாழ்த்துகிறது.