Home செய்திகள் நிலக்கோட்டை – குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவது குறித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் தலைமையில் ஆலோசனை கூட்டம்

நிலக்கோட்டை – குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவது குறித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் தலைமையில் ஆலோசனை கூட்டம்

by mohan

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவது குறித்து தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் தலைமையில் ஆலோசனை கூட்டம நடைபெற்றது.. கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்  டி ஜி வினய் , திண்டுக்கல் முன்னாள் மாநகர மேயர் மருதராஜ், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ் தேன்மொழி சேகர் ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள். நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி பாண்டியன் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் முன்னாள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் யாகப்பன், நிலக்கோட்டை தாசில்தார் நவநீதகிருஷ்ணன், முன்னாள் நிலக்கோட்டை பேரூராட்சி  சேகர் , உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் பின்வருமாறு.      வனத்துறை அமைச்சர்  தமிழகம் தற்போது நிலவும் வறட்சி என்பது இயற்கையின் இடர்பாடுகள் ஆகும்.        இந்த இயற்கையின் இடர்பாடுகளின் காரணமாக தற்போது மனிதர்களுக்கும் ,விலங்குகளுக்கும், ஆடு ,மாடுகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது என்பது ஏற்கக் கூடிய வகையில் தான் உள்ளது.                           இருப்பினும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியை பொறுத்தவரை பல்வேறு வகைகளில் அதிகாரிகளும் பணியாளர்களும் இணைந்து மக்களுக்குத் தேவையான தண்ணீரை தட்டுப்பாடின்றி வழங்கி வருகிறார்கள் என்பது தெளிவாகிறது.        ஆகவே வரும் காலங்களிலும் நீர் தட்டுப்பாடு இன்றி தேவையான அத்தனை வசதிகளையும் உடனடியாக செய்து தர தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.                எனவே அனைத்து துறை அதிகாரிகளும் தற்போது ஏற்பட்டுள்ள நிலையினை மாற்றி பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி தண்ணீர் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!