Home செய்திகள் தென்காசியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி; மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு..

தென்காசியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி; மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு..

by mohan

தென்காசி மாவட்டத்தில் 11, 12 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து பள்ளி, மாணவ மாணவிகளுக்கும், அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். இது பற்றிய மாவட்ட ஆட்சியரின் செய்திக் குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றாலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் 11,12 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப் பெற்று பரிசுகள் (ம) பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப் பெற உள்ளது. 11, 12 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், 09.01.2024 அன்றும், கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 10.01.2024 அன்றும் காலை 10.00 மணிக்கு தென்காசி இசிஈ அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகளில் அனைத்து மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவிகளும், அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளும் கலந்து கொள்ளலாம். ஒரு பள்ளியிலிருந்து ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் வீதம் மூன்று போட்டிகளுக்கு 03 மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

போட்டிகளுக்கான தலைப்புகள் போட்டிகள் தொடங்கும் முன்பு நடுவர்கள் முன்னிலையில் அறிவிக்கப்படும். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்கள் பள்ளி தலைமையாசிரியரின் பரிந்துரையுடன் உரிய படிவத்தினை நிறைவு செய்து இப்போட்டி நடைபெறும் நாளில் அளிக்கப்பட வேண்டும். கல்லூரியிலிருந்து ஒரு போட்டிக்கு இரண்டு மாணவர்கள் வீதம் மூன்று போட்டிகளுக்கு 06 மாணவர்கள் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்கள் கல்லூரி முதல்வரின் பரிந்துரையுடன் உரிய படிவத்தினை நிறைவு செய்து இப்போட்டி நடைபெறும் நாளில் அளிக்க வேண்டும். போட்டிக்கான தலைப்பு போட்டி துவங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக வழங்கப்படும். கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக இரண்டாம் தளத்தில் செயற்பட்டு வரும் மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். (தொலைபேசி எண் 0462 – 2502521) தென்காசி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் இப்போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com