Home செய்திகள் பொருளாதார முன்னேற்றத்துடன் எல்லோரும் சிறந்து விளங்க வேண்டும் மாநில திட்டக்குழு துணை தலைவர் கீழக்கரை கல்லூரியில் பேச்சு..

பொருளாதார முன்னேற்றத்துடன் எல்லோரும் சிறந்து விளங்க வேண்டும் மாநில திட்டக்குழு துணை தலைவர் கீழக்கரை கல்லூரியில் பேச்சு..

by ஆசிரியர்

இராமநாதபுரம், ஆக.25- இராமநாதபுரம்  மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் தமிழ் கனவு கருத்தரங்கு  நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். மாநில திட்டக்குழு துணைத்தலைவர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் பேசுகையில், தமிழ் கனவின் நோக்கம் எல்லோரும் பொருளாதார முன்னேற்றம் பெற்று சிறந்து விளங்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். அந்த வகையில் நமது முன்னோர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்ததால் அவர்களின் இலட்சியங்களை நிறைவேறாத நிலையில் இருந்தன. பொதுவாக ஒரு மனிதனின் இலட்சியம் நிறைவேறுவது என்பது மூன்று வகையில் சரியான நிலைப்பாடுகள் இருந்தால் அங்கு இலட்சியம் என்பது நிறைவேறும். அதற்கு முதலில் ஒவ்வொருவருக்கும் சரியான உணவு, சரியான கல்வி, போதிய வேலைவாய்ப்பு இந்த மூன்றும் மிக முக்கியம். இம்மூன்றும் சரியான நிலையில் சரியான காலகட்டத்தில் வழங்கப்படுவதால் பொருளாதார நிலை மிக முன்னேற்றம் கண்டுள்ளது.

தமிழ் இணைய கல்வி கழகம், தமிழ் கனவு என்னும் இந்த பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி ஒரு ஆண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டு துவங்கி மாவட்டத்தில் முதல் நிகழ்ச்சியாக இன்று இங்கு நடைபெறுகிறது. கடந்தாண்டு 100 கல்லூரிகளில் நடைபெற்றது. இந்தாண்டு 200 கல்லூரிகளில் நடைபெறுகின்றன.

இன்றைய மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவது ஆரோக்கியமான எதிர்கால சமூக கட்டமைப்பின் முக்கியமான பகுதியாகும். தமிழ்நாடு முழுவதும் 200 கல்லூரிகளில் தமிழர் மரபு நாகரீகமும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, தொல்லியல் ஆய்வுகள், தமிழக தொழில் வளர்ச்சி, கல்விப் புரட்சி, அரசின் திட்டங்களை செயல்படுத்தும் முறைகள் முதலிய தலைப்புகளின் கீழ் சொற்பொழிவு வழங்கப்படுகிறது. இந்தியாவில் உயர்கல்வி பெறுபவரின் எண்ணிக்கை 20% அதே நேரம் மாநில அளவில் ஒப்பிடுகையில் இங்கு மகளிர் மட்டும் 44% உயர் கல்வி பெறுகின்றனர் தமிழகத்தில் சிறந்த பொருளாதாரம் முன்னோக்கி செல்கிறது. பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி வழங்குவதின் நோக்கம் அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும். பெண்களுக்கு மாதந்திர உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழகத்தில் வழங்கியதின் மூலம் அடித்தட்டு மக்களின் பொருளாதார மேம்பாட்டை உயர்த்த வழிவகை செய்யும் வகையில் தமிழ் கனவு என்னும் இலக்கு தொடர்ந்து பயணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பேசினார்,

வேலைவாய்ப்பு தொடர்பான கண்காட்சி அரங்குகளை மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் பார்வையிட்டார். தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி முதல்வர் சுமையா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) திருமதி.மாரிச் செல்வி, கீழக்கரை வட்டாட்சியர் திர பழனிக்குமார், கல்லூரி விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!