Home செய்திகள் ஜல்லிகட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பணம் பெற்றதாக நடிகை அதீதிமேனன் கூறியதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்வோம் என தமுக்கம் நண்பர்கள் குழு நிறுவனர் வழக்கறிஞர் ஷோபனாராஜன் பேட்டி…

மதுரை செய்தியாளர்கள் அரங்கில் தமுக்கம் நண்பர்கள் குழு அமைப்பின் நிறுவனர் ஷோபனாராஜன் வழக்கறிஞர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது: “திரைப்பட நடிகர் அபிசரவணன் மற்றும் நடிகை அதீதிமேனன் தொடர்பான பிரச்சனையில் நடிகை அதீதிமேனன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது ஜல்லிகட்டுக்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பணம் பெற்றதாகவும், அந்த பணத்தில்தான் நடிகர் அபி சரவணன் வீடு வாங்கியதாகவும் கூறியுள்ளார். அவரின் இந்த குற்றச்சாட்டு ஜல்லிகட்டு பிரச்சனைக்காக சுதந்திர போராட்டத்திற்கு இணையாக தன்னெழுச்சியோடு போராடியவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளார். போராட்டத்தில் பணம் பெற்றதாக வசூல் செய்ததாக அதீதிமேன்ன் கூறியது தவறானது கண்டிக்கதக்கது எனவும் அவரது பேச்சிற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் நாங்கள் நடிகை அதீதிமேனன் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர உள்ளோம்@ என தெரிவித்தார்.

மேலும் அபிசரவணன்- அதீதிமேனன் பதிவுதிருமணம் தொடர்பாக பதிவுத்துறை அலுவலகத்தில் இருந்து போலியான ஆவணம் எடுத்துள்ளதாகவும் அவதூறு பரப்பும் வகையில் பேசியது நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் என்பதால் நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் எனவும் குற்றம்சாட்டினார். மேலும் உரிமைக்காக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கொச்சைபடுத்தியுள்ளார் அதீதிமேனன் எனவும், அபிசரவணன் 5நாட்கள் போராட்டத்தில் தங்களோடு இருந்த நிலையில் யாரிடமும் நாங்கள் பணம் பெறவில்லை என்றார். பேட்டியின் போது ஜல்லிகட்டுக்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் உடனிருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!