சோழவந்தானில் தேனி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்..
சோழவந்தானில் உள்ள தனியார் மகாலில் அதிமுக தேனி பாராளுமன்ற வேட்பாளர் நாராயணசாமியை அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏக்கள் ஜக்கையன், மாணிக்கம், கருப்பையா, மகேந்திரன், தவசி, ஏ.கே.டி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முறுக்கோடை ராமர் மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஆகியோர் வரவேற்றனர். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார், அதிமுக தேனி பாராளுமன்ற வேட்பாளர் நாராயணசாமியை அறிமுகப்படுத்தி பேசினார். தொடர்ந்து அதிமுக தேனி நாடாளுமன்ற வேட்பாளர் நாராயணசாமி ஏற்புரை நிகழ்த்தினார். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவிலேயே தேனி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் முதலாவதாக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்ற இலக்கை நாம் அடைய வேண்டும் என்று பேசினார்.
கூட்டத்தில், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன் காளிதாஸ்,, அரியூர் ராதாகிருஷ்ணன், எம் வி பி ராஜா, பேரூர் செயலாளர்கள் முருகேசன், டாக்டர் அசோக் குமார், அழகுராஜா, குமார் மற்றும் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட அனைத்து கிளைக்கழக நிர்வாகிகள் பிற அணி நிர்வாகிகள் மகளிர் அணியினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா நன்றி தெரிவித்தார் மேலும் மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மற்றும் தேனி மாவட்ட நிர்வாகிகள் உட்பட மாநில, ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.