Home செய்திகள் சோழவந்தான் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க முதல்வருக்கு கோரிக்கை..

சோழவந்தான் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க முதல்வருக்கு கோரிக்கை..

by Askar

சோழவந்தான் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க முதல்வருக்கு கோரிக்கை..

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி மிக பழமை வாய்ந்ததாகும் இந்த தொகுதியானது உசிலம்பட்டி தொகுதியின் ஒரு பக்கமும் மதுரை கிழக்கு தொகுதி மறுபக்கமும் மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட ஒரு பகுதியும் மற்றொரு பக்கத்தில் நிலக்கோட்டை தொகுதியின் எல்லையும்உள்ளடக்கிய சுமார் 2 1/4 லட்சம் மக்கள் தொகை கொண்ட தொகுதியாக உள்ளது இந்த தொகுதியில் சோழவந்தான் வாடிப்பட்டி அலங்காநல்லூர் பாலமேடு ஆகிய நான்கு பேரூராட்சிகளும் வாடிப்பட்டி அலங்காநல்லூர் ஆகிய இரண்டு யூனியன்களும் உள்ளடக்கி உள்ளது மதுரைக்கு அருகில் உள்ள இந்த தொகுதியானது தேனி பாராளுமன்ற தொகுதியில் வருகிறது சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகள் விவசாய நிலங்களாக இருப்பதால் விவசாய தொழில் மற்றும் விவசாய கூலி தொழில்களை நம்பியே இந்த தொகுதியின் பெரும்பாலான மக்கள் உள்ளனர் இந்த நிலையில் தொகுதியில் உள்ள மாணவ மாணவிகள் உயர்கல்வி படிப்பதற்காக சுமார் 25 கிலோ மீட்டர் தூரமுள்ள மதுரை மற்றும் உசிலம்பட்டி திருமங்கலம் நிலக்கோட்டை ஆகிய அருகில் உள்ள தொகுதி பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதால் கடந்த சில வருடங்களாக சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட சோழவந்தான் வாடிப்பட்டி அலங்காநல்லூர் ஆகிய ஏதாவது ஒரு இடத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட அமைச்சர்கள் இடத்தில் தொடர்ந்துகோரிக்கை வைத்து வருகின்றனர் ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த கோரிக்கையானது நிராகரிக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை தொடங்கி வைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிட நாளை 24 .1 .24 புதன்கிழமை அலங்காநல்லூர் வருகை தரும் தமிழக முதல்வர் இந்த கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து சோழவந்தான் தொகுதிக்கு அரசு கலைக்கல்லூரி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தொகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் மேலும் அலங்காநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்படாமல் இருப்பதால் இந்த ஆலையில் உள்ள தளவாடப் பொருட்களும் துருப்பிடித்து சேதம் அடைந்துள்ள நிலையில் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கு உடனடியாக நிதி ஒதுக்கி இந்த பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என எனவும் கோரிக்கை வைத்துள்ளனர் ஆகையால் நாளை மதுரை வரும் தமிழக முதல்வர் மாணவ மாணவிகள் மற்றும் விவசாயிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்களும் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்களும் இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் சோழவந்தான் தொகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com