சோழவந்தான் அருகே வைகை ஆற்றில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு..

சோழவந்தான் அருகே வைகை ஆற்றில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு..

சோழவந்தான் அருகே தேனூர்கிராமத்தைச் சேர்ந்த தாவூத் மகன் அஸ்லாம் வயது 27. இவர் மதுரை அருகே உள்ள பரவை மார்க்கெட்டில் லோடுமேன் ஆக வேலை செய்து வருகிறார். இவர் இன்று மாலை வேலை முடித்து தேனூர் கிராமத்தில் உள்ள வைகை ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அங்கு ஆழமான பகுதியில் சென்ற பொழுது குளிக்கச் சென்ற அஸ்லாம் நீரில் மூழ்கினார்.இதனால் கிராம மக்களும் போலீசாரும் வைகை ஆற்றில் அஸ்ஸலாமை தேடினர். அப்பொழுது அஸ்லாமைபிணமாக மீட்டனர். இதுகுறித்து சோழவந்தான் போலீசார் வழக்கு பதிவு செய்து பிணத்தை மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். குளிக்கச் சென்ற சிறிது நேரத்தில் அஸ்லாம் வைகை ஆற்றில் மூழ்கி இறந்தது கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

செய்தியாளர், வி .காளமேகம்