இலங்கைக்கு கடத்த முயன்ற 500 கிலோ பீடி இலை சிக்கின…

இராமேஸ்வரம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 10 லட்சம் மதிப்பிலான 500 கிலோ பீடி இலை மூடைகளை உச்சிப்புளி அருகே ராமநாதபுரம் க்யூ பிராஞ்ச் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நெல்லையைச் சேர்ந்த மைதீன், 52, எனபவரை கைது செய்தனர். பீடி இலை மூடைகளை ஏற்றி வந்த சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.