Home செய்திகள் ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்க்கு கடத்தி வரப்பட்ட சுமார் அரை டன் எடையுள்ள 11 செம்மர கட்டைகள் பறிமுதல்…

ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்க்கு கடத்தி வரப்பட்ட சுமார் அரை டன் எடையுள்ள 11 செம்மர கட்டைகள் பறிமுதல்…

by ஆசிரியர்

வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அடுத்த பொன்னை தமிழக ஆந்திர எல்லைப் பகுதியான இப்பகுதியின் வழியாகதான் ஆந்திராவிலிருந்து செம்மரம்,எரிசாராயம் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுகின்றனர் .இந்நிலையில் நேற்று இரவு சித்தூர் சோளிங்கர் சாலையில் பொன்னை காவல் ஆய்வாளர் இலக்குவன் மற்றும் உதவி ஆய்வாளர் அண்ணாமலை உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு நோக்கி அதிவேகமாக வந்த இரு கார்களை சோதனைக்காக மடக்கினர் கார்கள் நிற்காமல் பிரிந்து சென்றதை அடுத்து போலீசார் இருகார்களையும் துரத்தி சென்றனர் ஒரு கார் தப்பிசென்றா நிலையில் மற்றோரு கார் சாலை ஓர கல்லில் மோதி பஞ்சர் ஆனது இதனை அடுத்து காரின் ஓட்டுனர் அருகில் இருந்த கரும்புதோட்டதில் இறங்கி தப்பி சென்றான் சந்தகம் அடைந்த போலீசார் காரை சோதனையிட்டனர் அப்போது காரில் பதுக்கி வைக்கபட்டிருந்த சுமார் அரை டன் எடையுடைய 11 செம்மர கட்டைகள் இருப்பது தெரியவந்தது இது முதல் தர செம்மரகட்டைகள் எனவும் இதன் மதிப்பு சுமார் 25லட்சம் என தெரியவந்தது.

இதனையடுத்து காரை பறிமுதல் செய்த பொன்னை போலீசார் தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் பிடிபட்ட செம்மரக்கட்டைகள் மற்றும் காரை ஆற்காடு வனசரக அலுவலக அதிகரிகளிடம் ஒப்படைத்தனர்.சினிமா பானியில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

செய்தி:- கே.எம்.வாரியார், வேலூர்..

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com