Home செய்திகள்கீழக்கரை செய்திகள் ரேஷன் பொருள் கடத்தலா??.. சமூக ஊடகங்களில் பரபரப்பாக வலம் வரும் வீடியோ குறித்து விசாரிக்க கோரிக்கை..

ரேஷன் பொருள் கடத்தலா??.. சமூக ஊடகங்களில் பரபரப்பாக வலம் வரும் வீடியோ குறித்து விசாரிக்க கோரிக்கை..

by ஆசிரியர்

ரேஷன் பொருள் கடத்தல் என சமூக ஊடகங்களில் பரபரப்பாக வலம் வரும் வீடியோ குறித்து மாவட்ட ஆட்சியாளர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கொரோனா நிவாரணத்திற்காக வழங்கப்பட்ட அரிசி, பருப்பு, சீனி உள்ளீட்ட ரேசன் பொருட்களை மதுரை அண்ணாநகர் முந்திரி தோப்பு, லால் பகதூர் சாஸ்திரி தெருவில் உள்ள மதுரை வடக்கு சரகத்திற்கு உட்பட்ட கடை எண் BZ003ல் இன்று 13/05/2020 மதியம் பட்ட பகலில் மாருதி ஆம்னி TN04A5603ல் ரேஷன் பொருட்களை சில நபர்கள் வண்டியில் ஏற்றும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து உரிய விசாரணை நடத்தி, கடத்தல் உண்மை எனும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியாளர் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், சம்பந்தபட்டவர்களை பணிநீக்கம் செய்து காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவ பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!