உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் மஹா சிவராத்திரி நாட்டியாஞ்சலி. பூலோகத்தின் முதல் சிவ தலமான உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 300 பரதக் கலைஞர்கள் பங்கேற்ற 12 ணி நேர நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் உள்ளது பூலோகத்தின் முதல் சிவ தலமான இங்கு ஒரே கல்லிலான பச்சை மரகத நடராஜர், தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு ஒவ்வொரு ஆண்டு நடைபெறும் ஆருத்ர தரிசனம் மிகவும் பிரசித்தி பெற்றது. சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடிய நடராஜர், இங்கு அறையில் ஆடியதாக கூறப்படுகிது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்தலத்தில் மகா சிவராத்திரியையொட்டி நாட்டியாஞ்சலி விழா நேற்று (04.3. 2019) மாலை 6:00 மணிக்கு தொடங்கி இன்று (05.03.2019) காலை 6:00 மணிவரை தொடர்ந்து நடைபெற்றது.
இதில் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகை முனைவர் சொர்ணமால்யா கணேஷ், சென்னை, ஸ்ரீரங்கம் பரத கலா அகாடமி சுமனா – அபிநயா, மதுரை நவரத்னாலயா கவிதா சிவராமகிருஷ்ணன், சென்னை ஊர்மிளா சத்ய நாராயணன், ராமநாதபுரம் மாலதி செந்தில்குமார், சென்னை சைலஜா, இராமநாதபுரம் அரசு இசைப்பள்ளி பவானி, சென்னை சுருதி சேகர், ஐதராபாத் அஸ்ரிதா வேமுகண்டி, நினிதா பிரவின், சென்னை ஸ்ரீராம் ஆகியோர் நடன, நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடந்த நாட்டியாஞ்சலியில் பங்கேற்ற கலைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் பரிசு வழங்கினார். கலை பண்பாட்டு துறை இணை இயக்குநர்கள் சி.ராஜேந்திரன், இரா.குணசேகரன், உதவி இயக்குநர் மு.க.சுந்தர், கலையியல் அறிவுரைஞர் அ.பூர்ண புஷ்கலா, ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ஆர்பிகே ராஜேஸ்வரி நாச்சியார் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தக்கார் நா. குமரன் சேதுபதி, திவான் வி.கே. பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் எம்.ராமு உள்பட பலர் பங்கேற்றனர்.
அதே போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பொன்னமங்கலம் கிராமத்தில் எழுசாமி கோவில் பெட்டி எடுப்பு திரு விழா வெகு விமர்சையாக கொன்டாடபட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பொன்னமங்கலம் கிராமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிவராத்திரியை முன்னிட்டு சிவன் ஏழுசுவாமி கோவில் பட்டி எடுப்பு திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டன.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த பொன்னமங்கலம் கிராமத்தில் சிவராத்திரி நிகழ்ச்சியை முன்னிட்டு உலகப் பிரசித்தி பெற்ற ஏழு சுவாமி சிவன் கோவில் பெட்டிஎடுத்து வெகுவிமர்சையாக கொண்டாடினர். இக்கோவில் மிகவும் 300 வருடங்களுக்கு முன்பு உள்ள பழமை வாய்ந்த கோவிலாகும் கோவிலில் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்களும் தமிழ்நாட்டின் தென் பகுதியைச் சேர்ந்தவர்களும் ஆகி அதிகமாக கலந்து கொண்டு வழிநெடுக குத்துவிளக்கு ஏற்றி தேங்காய் பழங்கள் பழங்களுடன்பெமாலை பட்டுதுண்டு 7 சுவாமி பெட்டிக்கு பூஜை செய்து பெண்களும் ஆண்களும் வழிபடுவார்கள்
இக்கோவிலின் பெட்டி உசிலம்பட்டி அருகேயுள்ள சிந்துப்பட்டி சிவன் கோவிலில் இருந்து சிவராத்திரி அன்று காலை 12 மணிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு அங்கிருந்து 7 சுவாமி பெட்டியை 40 கிலோ மீட்டர் வரை தலையில் தூக்கி நடைபயணமாக கொண்டுவரப்பட்டு மேளளம் முழங்கி வானவெடி வெடித்தும்பொன்னமங்கலம் கிராமத்தின் சிவன் கோவில் ஆலயத்தில் வைத்து ஏழு நாட்களுக்கு இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் அனைவரும் பூஜைகள் செய்து வழிபடுவார்கள் இக்கோவிலின் ஏழு சக்தியை வழிபடுவதால் குடும்ப கஷ்டம் வேலையின்மை திருமணத்தடை நீங்கி அனைத்து தடைகளும் நீங்கி சிறப்பான வாழ்க்கை அமையும் என்று இப்பகுதி மக்களின் கருத்தாகும் இக்கோவில் பெட்டியினுள் பல கோடி மதிப்புள்ள ஆபரணங்கள் ஐம்பொன் சிலைகள் இருப்பதாக கூறப்படுகின்றன பெட்டியை திறந்து 300 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர் இப்படி ஏழு நாட்கள் முடிந்த திரும்பவும் இப்பகுதி மக்கள் திரும்ப எடுத்துச் சென்று சிந்து வெட்டி கிராம சிவன் கோவிலில் வைத்து விட்டு திரும்பி வந்துவிடுவதாக கூறப்பட்டனர்.
இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு தினமும் கலைநிகழ்ச்சி விளையாட்டு போட்டிகள்கிடாய்வெட்டி கறி விருந்து எனசந்தோஷாத்துடன்வெகுவிமர்சையாக கொண்டாடபட்டனர்.
அதே போல் மதுரை ஜீவாநகரில் அருள்மிகு தாத்தா என்ற ஸ்ரீசத்திய முனீஸ்வர்ர் ஆலய 62வது ஆண்டு மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இவ்விழாவையொட்டி 1000நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆலய டிரஸ்டிகள் சுப்பையா நாயுடு,. அழகர்சாமி நாயுடு மற்றும் நிர்வாகிகள் தலைவர் திருமலைசாமி, செயலாளர் ரெங்கராஜ், பொருளாளர் கண்ணன், நிர்வாககக்குழு உறுப்பினர்கள் முனியாண்டி, கிருஷ்ணமூர்த்தி, கோ
இராமேஸ்வரம் ராமநாதசுவாமி பர்வத வர்த்தினி அம்பாள் கோயில், மாசி மகா சிவராத்திரி திருவிழா, 25.02.19 இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் சுவாமி – அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் மண்டகப்படிகளில் எழுந்தருளினர். சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, சுவாமி – அம்பாள் வீதியுலா நடந்தது.
மகா சிவராத்திரி தினத்தன்று நடராஜர் வீதியுலா, பட்டயம் வாசித்தல் வைபவம் நடந்தன. இதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான சிவ பக்தர்கள் ராமநாதசுவாமி கோயிலில் விடிய, விடிய சிறப்பு தரிசனம் செய்தனர். நேற்று (04.3.19) இரவு சுவாமி – அம்பாள் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.
இதனையடுத்து இன்று காலை 9:00 மணிக்கு அம்பாள் திருத்தேரோட்டம் நடந்தது. கோயில் தக்கார் குமரன் சேதுபதி, இணை ஆணையர் மங்கையர்க்கரசி மற்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தனர். இதைத் தொடர்ந்து, கோயிலின் நான்கு ரத வீதிகளில் திருத்தேர் பவனி வந்து நிலையை அடைந்தது. அங்கு, சுவாமி – அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மேலத் தெருவில் உள்ள மண்டகப்படிக்கு சுவாமி – அம்பாள் தங்கக்குதிரை வாகனத்தில் இன்று (05.3.2019) மாலை எழுந்தருளி அருள் பாலித்தனர்.
You must be logged in to post a comment.