Home செய்திகள் சிவகாசியில் இருந்து, ஏராளமான முருக பக்தர்கள், திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை…

சிவகாசியில் இருந்து, ஏராளமான முருக பக்தர்கள், திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை…

by syed abdulla

சிவகாசியில் இருந்து, ஏராளமான முருக பக்தர்கள், திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை…

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஏராளமான முருக பக்தர்கள் பாதயாத்திரை புறப்பட்டனர். சிவகாசி நகரின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த ஏராளமான முருக பக்தர்கள், திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்கள் குழு என்ற அமைப்பில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், மார்கழி மாத கடைசியில் சிவகாசியில் இருந்து பாதயாத்திரையாக திருச்செந்தூர் ஸ்ரீசுப்பிரமணியர் சுவாமி கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடுகள் செய்வார்கள். இன்று காலை, திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்கள் குழுவைச் சேர்ந்த ஏராளமான முருக பக்தர்கள் செண்டை மேளம் முழங்க, மயில் காவடிகள் சுமந்து ஆடிப்பாடியபடி முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, கடம்பனுக்கு அரோகரா என்று கோஷங்கள் முழங்கியபடி சிவகாசியின் முக்கிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை தொடங்கினார்கள். பாதயாத்திரை செல்லும் பக்தர்களை அவர்களது குடும்பத்தினர் மாலையணிவித்து வழியனுப்பி வைத்தனர்.

செய்தியாளர், வி.காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com