Home செய்திகள்மாநில செய்திகள் திருத்தங்கல் ஸ்ரீகருநெல்லிநாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது..

திருத்தங்கல் ஸ்ரீகருநெல்லிநாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது..

by Askar

திருத்தங்கல் ஸ்ரீகருநெல்லிநாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்லில், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீமீனாட்சி அம்பாள் சமேத ஸ்ரீகருநெல்லிநாதர் சுவாமி கோவில் உள்ளது. புராதானமிக்க இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்காக சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் பணிகள், கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், வரும் பிப்ரவரி மாதம் 11ம் தேதி (ஞாயிறு கிழமை) கும்பாபிஷேகம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக முகூர்த்தக்கால் நடும் விழா, கோவில் வளாகத்தில் சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள், நிகழ்ச்சி உபயதாரர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சுமார் 18 ஆண்டுகளுக்கு பின்பு, திருத்தங்கல் ஸ்ரீகருநெல்லிநாதர் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, திருக்கோவில் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. கும்பாபிஷேகப் பணிகளை, சிவ பக்தர்கள் மற்றும் முருக பக்தர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com