Home செய்திகள்உலக செய்திகள் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா; அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்..

1 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா; அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்..

by Abubakker Sithik

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தலைமையில், ஊரக வளர்ச்சி துறையின் சார்பில், சிவகங்கை மாவட்டம் வாணியங்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 1 இலட்சத்து நூறு மரக்கன்றுகள் நடும் விழாவினை தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர். பெரியகருப்பன் தலைமையில், ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் வாணியங்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுக் குடியிருப்பு, ஏனாபுரம், கேந்திர வித்யாலயா பள்ளி மற்றும் அண்ணாமலை நகர் அகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜீத், முன்னிலையில், மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவிக்கையில், தமிழ்நாட்டில் வனம் மற்றும் மரங்களின் பரப்பை அதிகரித்து, பசுமை போர்வையை மேம்படுத்தும் உன்னத நோக்கிலும், வனப்பகுதியில் மட்டுமின்றி வனத்திற்கு வெளியே இருக்கும் காலியிடங்களில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு, வளர்க்கவும் மாபெரும் மரக்கன்று நடும் திட்டத்தினை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அதன் அடிப்படையில், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் மாபெரும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடவு செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிடப்பட்டதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்று வருகிறது. இம்மரக்கன்றுகள் வனப்பகுதிகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும், அரசு மற்றும் தனியார் அலுவலக வளாகங்களிலும், சாலையோரங்களிலும், பூங்காக்களிலும், பெரிய அளவிலான குடியிருப்புகளில் நடப்பட்டு, பராமரித்து பாதுகாத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயற்கை வளத்தினை மேம்படுத்திடும் பொருட்டும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், எதிர்கால சந்ததியினரின் நலன் கருதியும், இதுபோன்று திட்டங்கள் தமிழக அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஆ.ரா. சிவராமன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வி.கேசவதாசன், துணை பதிவாளர் பாலச்சந்திரன், முன்னாள் அமைச்சர் தென்னவன், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், வாணியங்குடி ஊராட்சி மன்றத்தலைவர் புவனேஸ்வரி சுரேஷ்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் பி.கோவிந்தராஜ், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கை மாறன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!