இராமநாதபுரத்தில் சிலம்புக்கலை பயிற்சி துவங்கியது!

இராமநாதபுரம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் தொடர்ந்து 4-வது ஆண்டாக இராமநாதபுரம் வெளிப்பட்டினம் டி.டி. விநாயகர் தொடக்கப் பள்ளியில்  சிலம்பு பயிற்சி   துவங்கியது.
இப்பயிற்சியில் அரசுப்பள்ளி மாணவ, மாணவியர் ஏராளமானோர் பங்கேற்றனர்.    ஜவகர் சிறுவர் மன்றம் ஏற்பாட்டில் நடைபெறும் இப்பயிற்சி சிலம்புக்கலை ஆசிரியர் சிலம்பு பாலாவால்  பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏழை மாணவ, மாணவியரும்     சிலம்புக் கலையை கற்றுக் கொள்ளும் வகையில் நான்காவது ஆண்டாக தொடர்ந்து நடைபெற்று வரும் இப்பயிற்சிக்கு    பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது.