சித்தார்கோட்டை ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது..

இராமநாதபுரம்   ஒன்றியம் சித்தார்கோட்டை ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்.  முனைவர் நடராஜன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கிராம சபைக் கூட்டத்திற்கு ராமநாதபுரம் ஊராட்சிகள் உதவி இயக்குனர் செல்லத்துரை,  ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்  உமுல்ஜாமியா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரசின் நலத்திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்      பேசியதாவது,   தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செய்து வருகிறது.              எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்படும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்ற சான்றிதழுடன் விண்ணப்பித்தால் உடனடியாக இணைப்பு வழங்கப்படும் பிரதம மந்திரி  ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து அனைவரும் பயன் பெறலாம். வங்கிக்கணக்கு இல்லாதவர்கள் உடனடியாக வங்கிக் கணக்கு துவங்கி அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை அனைவரும் பெறவேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முற்றிலும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் அப்போதுதான் நாம்  பிளாஸ்டிக் இல்லாத         மாவட்ட த்தை   உருவாக்க     முடியும். திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும்.  சுகாதார மான வாழ்க்கை நம்   உடல் நலத்திற்கு நல்லது.    நல்ல மழை பெய்தால உப்புத்தண்ணீர் சுவை  இன்னும் 2 ஆண்டுகளில் நல்ல தண்ணீராக மாறும். அதற்கு மரம் வளர்ப்பதில் ஈடுபாடு காட்டவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில்  தாசில்தார் சிவக்குமார்,. மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கயிலைச்செல்வம்,   துணை   வட்டார வளர்ச்சி அலுவலர் விஜி,  சித்தார்கோட்டை அதிமுக கிளை செயலாளர் தமீம்,        இலந்தைக்கூட்டம் முருகேசன், சித்தார்கோட்டை அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் நாகசுந்தரம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.