மதுரையில் சிறுவர்களால் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களால் ஏற்படும் விபத்து…

மதுரை பசுமலை அருகே சிறுவன் இயக்கிய ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் பெண் ஒருவருக்கு கை முறிவு ஏற்பட்டது.

மதுரையில் தொடர்ந்து ஷேர் ஆட்டோக்கள் அதிவேகமாகவும், போட்டி போட்டுக்கொண்டு ஆட்டோக்களை இயக்குவதால் தொடர் விபத்துகள் ஏற்படுகிறது. இதை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் இதுபோன்ற ஆட்டோக்களை பறிமுதல் செய்து மீண்டும் உங்களிடம் அவர்களிடம் ஒப்படைக்க கூடாது எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

விபத்து குறித்து கரிமேடு போக்குவரத்து புலனாய்வு காவல்துறை விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்