கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரியில் குடியரசு தின விழா ..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குடியரசு தின விழா முதல்வர் முனைவர் இ. ரஜபுதீன் தலைமையில் நடைபெற்றது. ஆங்கில துறை பேராசிரியர் என். சுலைமான் கிராஅத் கூறினார். நுண்ணுயிரியல் துறை தலைவர் முனைவர் எம். ஆனந்த் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக இந்தியன் ரெட் கிராஸ் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம், யூத் ரெட் கிராஸ் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு தேசியக் கொடி ஏற்றினார். முதுகலை வணிகவியல் துறை தலைவர் முனைவர் பி. பாலகிருஷ்ணன் தலைமையில் அனைவரும் குடியரசு தின உறுதிமொழி ஏற்றனர். மேலாண் துறையியல் தலைவர் முனைவர் எஸ். விமலி நன்றி கூறினார். உடற்கல்வி துறை பேராசிரியர் முனைவர் தவசிலிங்கம் மற்றும் பேராசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்