
கீழக்கரை இஸ்லாமிய கல்விச் சங்கம் சார்பாக இன்று 03/07/2020 இலவச கபசுர குடிநீர் முகாம் வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்துள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
10 மற்றும் 11வது வார்டுக்குட்பட்ட பிரபுக்கள் தெரு, ஜின்னா தெரு, மதார் அம்பலம் தெரு, அத்திலை தெரு, NMT தெரு, சேரான் தெரு, லப்பை தெரு, ஆடருத்தான் தெரு ஆகிய பகுதிகளில் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
இந்த முகாமை சங்கத்தின் செயலாளர் அஜ்மல் கான் தலைமையேற்று நடத்தினார், அல் மத்ரஸத்துர் ராழியாவின் தாளாளர் அஹமத் சுஹைல் துவக்கி வைத்தார். ஏற்பாடுகளை சங்கத்தின் பொருளாளர் சல்மான் கான், அல்தாஃப் ஆகியோர் செய்திருந்தனர். சங்கத்தின் உறுப்பினர்கள் ஜமீல், சுகைல் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த முகாமின் மூலம் 1500 க்கும் அதிமாக பொதுமக்கள் பயன்பெற்றனர். இன்னும் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பல்வேறு சமூக அமைப்பு சார்பாக விழிப்புணர்வு பிரசுரம் வழங்கப்பட்டது.

You must be logged in to post a comment.