மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் எம்எல்ஏ 1000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பூம்புகார் சட்டமன்ற அஇஅதிமுக உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் கொரோனா நிவாரணமாக 5 கிலோ அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், கீழப்பெரும்பள்ளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மகேந்திரன், மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் தேவி சுரேஷ்குமார், எஸ்.செல்வம், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராஜகோபால் கீழப்பெரும்பள்ளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குனர் செல்வராஜ், கீழேயோ கூட்டுறவு வேளாண்மை வங்கி தலைவர் கபடி பாண்டியன் மற்றும் மேலப்பெரும்பள்ளம் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..