எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் திருவள்ளுவர் சிலை அருகே, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என குற்றம் சாட்டப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் உச்சநீதிமன்றம் விடுதலை திருவண்ணாமலை எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் எஸ்டிபிஐ மாவட்டத் தலைவர் முஸ்தாக் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் இதில் சிறப்பு விருந்தினராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட நிர்வாகிகள் ஜாபர் அலி மற்றும் ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர். உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்வாக சமூக இடைவெளி கடைபிடித்து நடைபெற்றது.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

உதவிக்கரம் நீட்டுங்கள்..