பிரதமரால் பாராட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி தி.மலை டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்பு

திருவண்ணாமலை நகர உட்கோட்ட டிஎஸ்பியாக ஐபிஎஸ் அதிகாரி டி.வி.கிரண் சுருதி பொறுப்பேற்றாா்.தெலங்கானா மாநிலம், ராபாத்திலுள்ள சா்தாா் வல்லபபாய் படேல் தேசிய போலீஸ் பயிற்சி அகாதெமியில், கடந்த 4-ஆம் தேதி பயிற்சியை முடித்த இவா், திருவண்ணாமலை நகர டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டாா்.2020-ஆம் ஆண்டுக்கான சிறந்த தகுதிக்கான ஐபிஎஸ் அதிகாரியாகவும் இவா் தோ்வு செய்யப்பட்டாா்.அதோடு, ஐபிஎஸ் பயிற்சி முடித்தவா்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி உரையாடிய போது, கிரண் சுருதியின் பேச்சை அவா் வெகுவாகப் பாராட்டியதாகக் கூறப்படுகிறது.ஏற்கெனவே, திருவண்ணாமலை நகர டிஎஸ்பி பொறுப்பில் இருந்த அண்ணாதுரை, கிராமிய உட்கோட்ட டிஎஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

உதவிக்கரம் நீட்டுங்கள்..