
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகருக்குள் கனரக வாகனங்கள் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.செங்கம், தினமும், 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. இதில், சரக்கு லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் வந்து செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை, மாலை நேரங்களில் லாரிகள் ஊருக்குள் அதிகளவில் வந்து செல்கின்றன. இதனால், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, வாகனங்கள் வரிசையாக நிற்கின்றன. மேலும், சாலையில் செல்பவர்களை பற்றி கவலைப்படாமல் லாரிகள் மின்னல் வேகத்தில் செல்வதில், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. டிரைவர்கள் உரிய ஆவணம் இல்லாமலும், குடிபோதையிலும் லாரிகளை ஓட்டி செல்கின்றனர்.இதற்கு முக்கிய காரணம் செங்கம் நகரில் உள்ள கடைகளுக்கு சரக்குகளை ஏற்றி வரும் கனரக வாகனங்கள், லாரிகளை சாலையோரங்களில் நிறுத்தி, சரக்குகளை இறக்குவதும், சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமைப்பு செய்யப்பட்டிருப்பதும்தான் எனவே, புறவழிச்சாலைகள் இருக்கும்போது, சரக்கு வாகனங்களை செங்கம் பகுதிக்குள் வந்து செல்ல தடைவிதிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர், செங்கம் சரவணக்குமார்
You must be logged in to post a comment.