திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் செங்கம் பகுதியில் தொடரும் சாதிய வன்கொடுமைகளை கண்டித்து முகத்தில் கருப்பு துணி அணிந்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் அம்பேத்கர் வளவன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஆறுமுகம் ஒன்றிய செயலாளர் சசிகலா ஒன்றிய செயலாளர் சஞ்சய் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியின் முன்னதாக நகர துணை செயலாளர் சத்யராஜ் தொகுதி செயலாளர் தனராசு அனைவரையும் வரவேற்று பேசினார்.ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் வழக்கறிஞர பார்வேந்தன் கண்டன உரையாற்றினார்..செங்கம் பகுதியில் தொடரும் சாதிய வன்கொடுமைகளை நிகழ்ந்துகொண்டிருக்கிறது கட்டமடுவு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி வெங்கட்ராமன் சாதிப் பெயர் சொல்லி அவதூராக பேசிய நபர் மீது கைது செய்யக் கோரியும் தீண்டாமை தடுப்பு சுவர் எடுக்க கோரியும் அறவழியில் போராடிய பொறுப்பாளர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெறக் கோரியும் அமைதி வழியில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி உத்தரவின்பேரில் செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் மற்றும் காவல்துறையினர் கைது செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் அறவழிப் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர் நிகழ்வின்போது செங்கம் வட்ட ஆட்சியர் முனுசாமி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர் ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் மோகன் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வம் கிழக்கு மாவட்ட செயலாளர் பகலவன் வழக்கறிஞர் சுந்தரராஜன் செங்கம் நகர பொறுப்பாளர்கள் ராஜா சிறுத்தை மணி கஜேந்திரன் அமானுல்லா தலித் பிரபு கார்த்திக் விஜி அலெக்ஸ் கதிர் குணா ஜாகிர் உசேன் வில்சன் பிரபாகரன் மற்றும் மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் காவல் ஆய்வாளர் சரவணன் உதவி ஆய்வாளர் யுவராஜ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் நகர அமைப்பாளர் அன்பு நன்றி கூறினார்.
40
previous post
You must be logged in to post a comment.