திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், புதுப்பாளையம் பகுதிகளில் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வன் வழிகாட்டுதலின்படி செங்கம் மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் 44 கிராம ஊராட்சிகளில் விழிப்புணா்வு நாடகம் நடைபெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து புதுப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு நாடகம் சிறப்பாக நடைபெற்றதுநிகழ்ச்சிக்குசெங்கம் வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரி கூடுதல் வட்டார கல்வி அலுவலர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வட்டார வள மைய மேற்பாா்வையாளா் முருகன் வரவேற்றார்.கல்வி அதிகாரிகள் பேசுகையில்; பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் விதமாக தமிழக அரசு இல்லம் தேடி கல்வி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக கிராமப்புற பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்று திட்டம் குறித்து பொதுமக்களிடம் விளக்கப்பட்டதுபுதுப்பட்டு கிராமத்தில் விழிப்புணா்வு நாடகம் தொடங்கப்பட்டு கோகுல் நகர், வேலன் நகர், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி ஆகிய பகுதியில் நடைபெற்று வருகிறது. நிகழ்வில் புதுப்பட்டு தலைமையாசிரியர் விஜயலட்சுமி ஆசிரியர்கள் மாணவர்கள் கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கண்டுகளித்தனர்
54
You must be logged in to post a comment.