
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம் மற்றும் புத்தக பை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்விற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கண்ணு பிள்ளை தலைமை தாங்கினார் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மீனா சீனிவாசன் முன்னிலை வகித்தார் பள்ளி தலைமையாசிரியர் ஜெயந்தி அனைவரையும் வரவேற்று பேசினார். பள்ளி மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கண்ணு பிள்ளை தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகம் மற்றும் விலையில்லா புத்தகப்பை சமுக இடைவெளி பின்பற்றி வழங்கினார். நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் வேல்முருகன் , சங்கீதா, தனலட்சுமி, நாராயணன், அரசு ,மகேஸ்வரி, ஆறுமுகம், ராஜா ,சாந்தி, மற்றும் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் செங்கம் சரவணகுமார்
You must be logged in to post a comment.