
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு தாலுக்கா தானிப்பாடி அருகே உள்ள தட்டாரணை வனப்பகுதியில் சிலர் சட்டவிரோதமாக கள்ள சாராயம் காய்ச்சி வருவதாக எழுந்த புகாரை அடுத்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் அவர்கள் உத்தரவின் பேரில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் நிர்மலா உதவி ஆய்வாளர் சுமன் தலைமையிலான போலீசார் கள்ள சாராயம் காய்ச்சி வருவதாக வந்த புகாரை அடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்அப்போது வனப்பகுதியில் உள்ள பாறைகள் நடுவே சுமார் 1000 லிட்டர் கள்ள சாராய ஊரல்களை பேரல்களில் பதுக்கி வைத்ததை கண்டறிந்த மதுவிலக்கு போலீசார் அதனை கைப்பற்றி சம்பவ இடத்திலேயே கீழே கொட்டி அழித்து நடவடிக்கை மேற்கொண்டனர் இதேபோன்று தானிப்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மலமஞ்சனூர் கூட்டாறு போந்தை நரிபள்ளி கீழ்பாச்சார் மேல் பாச்சார் உள்ளிட்ட பகுதிகளில் சில சமூக விரோதிகள் சட்டவிரோதமாக அதிக அளவில் கள்ளச்சாராய ஊறல்களை பதுக்கிவைத்து அதனை காய்ச்சி அதிக விலைக்கு விற்று வருவதாக புகார் எழுந்துள்ளதுசட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
You must be logged in to post a comment.