
திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் தொகுதியில் பொதுமக்களிடம் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும் என்று செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தெரிவித்தார்.செங்கம் அடுத்த தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதியிலும் சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டு கிராமப்புற பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார் நிகழ்ச்சிக்கு தண்டராம்பட்டு ஒன்றிய கழக செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார்நிகழ்ச்சியில் தண்டராம்பட்டு தானிப்பாடி மற்றும் கிராமப்புற பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று பேசியதாவது:-பொதுமக்களிடம் பெறும் கோரிக்கை மனுக்களுக்கு முறையான நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே பொதுமக்கள் தங்களது தேவை மற்றும் ஊர் நன்மைகளுக்காக கொடுக்கப்படும் மனுக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தொகுதியில் எந்த குறையும் இல்லை என்ற நிலையை ஏற்படுத்துவோம்.இவ்வாறு பொதுமக்களிடம் தெரிவித்தார். நிகழ்வின்போது திமுக கட்சி மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்
You must be logged in to post a comment.