
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் வணக்கம் பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட செயலாளர் ம.வெங்கடேஷ் வழிகாட்டுதலின்படி உலக அமைதி நாள் கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் , மாவட்ட அமைப்பு ஆணையர் வி. ஆர். அன்பழகன் தலைமையிலும் மாவட்ட பயிற்சி ஆணையர் அ.பாலகுமார் முன்னிலையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் உலக அமைதிக்காக புறாக்களை பறக்க விட்டும்,புதிதாக சேர்ந்த சாரண சாரணிய மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது.பின்பு சுற்றுப்புற சூழல் நீர் காற்று ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பதாகைகளை கையில் ஏந்திக் கொண்டும் மற்றும் உறுதிமொழியையும் சாரண சாரணிய மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. உடன் பள்ளி இருபால் ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டனர்
You must be logged in to post a comment.