செங்கம் பகுதியில் திமுகவினர் மத்திய அரசை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பெண்ணாத்தூர் ஊராட்சியில் மத்திய அரசை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகம் முழுவதும் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் அந்தப்போராட்டத்தை ஆதரித்து திமுக சார்பில கருப்புக்கொடி போராட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந்து திமுக மாவட்ட செயலாளர்  எ.வ.வேலு உத்தரவின்பேரில், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி ஆலோசனையின் பேரில் செங்கம் அடுத்த மேல் பணத்தை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் விஜய் தலைமையில் மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவர் விசாலாட்சி வெங்கடேசன், திமுக நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி,  ஆர்கே செல்வம் முருகன் மற்றும் ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்இதேபோல் மேல் பள்ளிப்பட்டு ஊராட்சியில் ஒன்றிய கவுன்சிலர் ஜம்புலிங்கம் தலைமையில் மத்திய அரசை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..