விஜயகாந்த் நலம்பெற்று தாயகம் திரும்ப வேண்டி கோயில்களில் தேமுதிகவினர் சிறப்பு வழிபாடு.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் போளூர் சாலையில் அமைந்துள்ள தேரடி விநாயகர் ஆலயத்தில் கேப்டன் விஜயகாந்த் பூரண நலம்பெற வேண்டி தேமுதிக கட்சி செங்கம் நகர பொறுப்பாளர் ராமமூர்த்தி தலைமையில் சிறப்பு பூஜைகள், வழிபாடு நடைபெற்றது.நிகழ்வில் தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் ஷாபு சண்முகம் , கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் ஜேசிபி சங்கர், நகர நிர்வாகிகள் அன்பழகன், ரஃபிக் பாஷா, சிவபெருமாள், பாலு, ஒன்றிய துணைச் செயலாளர் ம.கோவிந்தன், ஒன்றிய கேப்டன் மன்ற துணை செயலாளர் கோபி, ஜெமினி, ராமு, அசோகன், மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது