செங்கம் பகுதியில் விநாயகர் சிலை கிடங்குகளுக்கு வருவாய் மற்றும் காவல்துறையினர்சீல்.

தமிழக அரசு விதித்துள்ள தடை உத்தரவை மீறி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் என இந்து முன்னணியினர் அறிவித்துள்ளனர். இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக விநாயகர் சிலைகளை தயாரிப்பு கிடங்குகளுக்கு ‘சீல்’ வைக்க ஆட்சியர் பா.முருகேஷ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் உத்தரவிட்டுள்ளனர்.அதன்படி,  செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் தலைமையில் வருவாய்த்துறையினர் குடோன்களை பூட்டி சீல் வைத்தனர். செங்கம் காவல்துறை ஆய்வாளர் சரவணன்  உதவி காவல் ஆய்வாளர் ஏசுராஜ் ,கிராம நிர்வாக அலுவலர் வருவாய்த்துறை அலுவலர் உடன் இருந்தனர்

உதவிக்கரம் நீட்டுங்கள்..