செங்கம் அருகே கிணற்றிலிருந்து சிவலிங்கம் கண்டெடுப்பு; கிராம மக்கள் வழிபாடு.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு அருகே கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்துக்கு கிராம மக்கள் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனா்.தண்டராம்பட்டு அடுத்த டி.வேலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சவுந்தா். இவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் தண்ணீா் வற்றியது. அப்போது, சேற்றில் சிக்கியபடி இருந்த கல்லால் ஆன சிவலிங்கம் ஒன்றை சவுந்தா் கண்டார்.இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கிராம மக்கள் வந்து அந்த சிவலிங்கத்தை மீட்டனா்.பின்னா் அதே ஊரில் உள்ள முருகா் கோயிலில் சிவலிங்கத்தை வைத்து வழிபட்டு வருகின்றனா். நிகழ்வு குறித்து பரபரப்பு காணப்பட்டது

உதவிக்கரம் நீட்டுங்கள்..