செங்கம் அருகே மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் தேடுதல் வேட்டையில் 3000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை அதிரடியாக கொட்டி அழித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு தாலுக்கா ஆத்திப்பாடி வனப்பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதாக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் நிர்மலா உதவி ஆய்வாளர் சுமன் தலைமையில் வனப்பகுதியில் 6 பேர் கொண்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் அப்போது வனப்பகுதி ஓடை அருகே சட்டவிரோதமாக சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டு இருந்துள்ளனர் அப்போது போலீசார் வருவதை கண்ட அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி வனப்பகுதியில் தலைமறைவாகினர் அதன்பிறகு அந்த நபர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சி பயன்படுத்திய 14 பேரல்கள் சுமார் 3000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் 250 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவை கீழே கொட்டி அழித்தனர் தொடர்ந்து வனப்பகுதியில் அத்துமீறி மர்ம நபர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சுவது அப்பகுதியில் தொடர்ந்து வருவதால் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் அவர்கள் வனப் பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார் மேலும் வனப்பகுதி ஏரி ஆறு உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வரும் நிலையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வனப்பகுதியில் கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது

உதவிக்கரம் நீட்டுங்கள்..