செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் விநாயகர் சிலை தயாரிப்பு தொழிலாளர்களுடன் ஆலோசனை கூட்டம்.

தமிழகத்தில் கொரோனாவால் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியன்று சிலை அமைப்பது குறித்து தமிழக அரசு நோய்த்தொற்று காரணமாக தடை விதித்திருந்தது இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 2 வாரம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அடுத்த மாதம் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது இதன் அடிப்படையில் செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் தலைமையில் செங்கம் காவல் நிலையத்தில் விநாயகர் சிலை தயாரிப்பு தொழிலாளர்களிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அப்போது மூன்றாவது அலைக்காண வாய்ப்பு இருந்து வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துவரும் நிலையில் அடுத்த மாதம் பத்தாம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளதால் இதனால் விநாயகர் சிலை தயாரிப்பு தொழிலாளர்கள் சிலைகளை விற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு உத்தரவிற்கு கட்டுப்பட வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது அப்போது சிலை தயாரிப்பு தொழிலாளர்கள் கடந்த ஆண்டு ஏற்ப்பட்ட கொரோனாவால் செய்து வைக்கப்பட்ட விநாயகர் சிலை முழுவதும் விற்கப்படாமல் கடன் சுமையில் இருந்து வருவதாகவும் அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகர் சிலைகளை விற்பதற்கு அனுமதி வழங்க மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று தர வேண்டுமென ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர் கோரிக்கையின் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக காவல் துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் தெரிவித்தார்