
திருவண்ணாமலை பாரத சாரணர் இயக்க மாவட்ட செயலரும், மண்டல ஒருங்கிணைப்பாளருமான பியூலா கரோலின் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்:தமிழ்நாடு பாரத சாரண சாரணிய தலைமையகத்தில் நடைபெற்ற சுதந்திர தின மிகச் சிறப்பாக நடைபெற்றது. சுதந்திர தின விழாவையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாநில அளவில் வெற்றி பெற்ற சாரண சாரணிய இயக்கத்தின் சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கினார் அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பழையனூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த கலைவாணி , விக்னேஷ் இன்டர்நேஷனல் பள்ளியைச் சார்ந்த சாரணிய ஆசிரியை ரமா காவியா, டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மற்றும் மாவட்ட மண்டல செயலாளர் பியூலா கரோலின் அவர்களுக்கு, மற்றும் மாவட்ட திரி சாரண ஆணையர் மற்றும் பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர் ஜி.குமார் ஆகியோருக்கு தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கலந்துகொண்டு விருதுகள் வழங்கி பாராட்டினார். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம் மற்றும் மாவட்ட கல்வி அலுவர் வேதநாயகம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
You must be logged in to post a comment.