Home செய்திகள் செங்கம் அருகே குடிநீர் விநியோகம் செய்யாத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அரசு பேருந்தை சிறைபிடித்து மக்கள் சாலை மறியல் போராட்டம்.

செங்கம் அருகே குடிநீர் விநியோகம் செய்யாத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அரசு பேருந்தை சிறைபிடித்து மக்கள் சாலை மறியல் போராட்டம்.

by mohan

செங்கம் அருகே முறையாக குடிநீர் விநியோகம் செய்யாத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அப்பகுதி மக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பள்ளிப்பட்டு சத்யா நகர் பகுதி மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் செங்கம் நீப்பத்துறை சாலையில் அமர்ந்து அவ்வழியாக சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது கடந்த சில மாதங்களாக சத்யா நகர் பகுதி மக்களுக்கு மூன்று அல்லது ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்து வருவதால் ஐந்து முதல் ஆறு குடம் தண்ணீர் மட்டுமே கிடைப்பதால் கிடைக்கும் குடிநீர் பற்றாக்குறையாக இருந்து வருவதாகவும் தங்களது பகுதிக்கு குடிநீர் தேக்க தொட்டி அமைக்க அடித்தளம் அமைத்து சென்ற அதிகாரிகள் இதுவரை அதனை கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டு உள்ளதாகவும் தங்களது பகுதிக்கு குடிநீர் தேக்க தொட்டி அமைத்தல் குடிநீர் பற்றாக்குறை இல்லாமல் தினந்தோறும் இரண்டு அல்லது மூன்று குடம் தண்ணீரை பிடித்து பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும் என அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்னிறுத்தி உள்ளார்கள் இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மேல்செங்கம் காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் வந்து தங்கள் பகுதிக்கு குடிநீர் தேக்க தொட்டி அமைத்து தருவதாக உத்தரவாதம் தர வேண்டுமென முழக்கங்கள் எழுப்பினர் இதனடிப்படையில் சாலையில் சாமிநாத பந்தல் அமைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அப்பகுதி மக்களிடத்தில் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் சக்திவேல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அப்பகுதி மக்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் இந்த சாலை மறியல் போராட்டத்தினால் சுமார் இரண்டு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com