சாரண சாரணியர் களுக்கான கொரோனா தொற்றுநோய் பாதுகாப்பு பயிற்சி முகாம்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் கல்வி மாவட்டம் மாம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் நேதாஜி படைப்பிரிவு மற்றும் ஒலேவ்சாரணியர் பிரிவினருக்கான தொற்றுநோய் பாதுகாப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது சாரண சாரணியர் முகாமில் பங்கேற்கும் அனைவரையும் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் தட்சணாமூர்த்தி வரவேற்றார்போளூர் கல்வி மாவட்ட, மாவட்ட முதன்மை ஆணையர் திருமதிஇரா.கலைவாணி அவர்கள் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.முகாமில் பங்கேற்றவர்களுக்குகபசுர கசாயம் முககவசம் வழங்கினார் கொரோனா குறித்த ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற சாரணிகளுக்கு பரிசு வழங்கினார் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு நடராஜன் பள்ளி துணை ஆய்வாளர் திருமதி ஷைனிமோல் ஊராட்சி மன்ற தலைவர் பச்சையம்மாள்- பன்னீர்செல்வம்மாம்பட்டு சுகாதார ஆய்வாளர் திரு கௌதம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்முகாமில் கைகளை தூய்மை செய்வதற்கான செயல்முறை பயிற்சிகள், அளிக்கப்பட்டன கொரோனாகுறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது தொற்றுநோய் குறித்த விழிப்புணர்வு துண்டறிக்கை வெளியிடப்பட்டதுமுகாமில், தொற்றுநோய் குறித்து, அவ்வப்போது மத்திய மாநில அரசுகள் அறிவிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தப்பட்டது முகாமில் ஆசிரியர்கள் ஆசிரியைகள் சாரண சாரணியர் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர் முகாம் நிறைவாக சாரணிய ஆசிரியை திருமதி சகிலா நன்றி கூறினார்

உதவிக்கரம் நீட்டுங்கள்..