
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையத்தில் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கொடிஏற்றுவிழா, பெயர் பலகை திறப்புவிழாநடைபெற்றது. எம். முனுசாமி கொடி ஏற்றினார். பெயர் பலகையை சி. பன்னீர்செல்வம் திறந்துவைத்தார். பின்னர் நடைபெற்ற மாவட்ட பேரவைக்கு பெ. கனகராணிதலைமை வகித்தார். ஆர். ராமச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார். எம். எஸ். மாதேஸ்வரன் அறிக்கை முன்வைத்தார். க. ஜோதி, பி. சங்கர், கவிதா, கலைச்செல்வி அறிக்கை மீதுவிவாதித்தனர். சென்னை கோரிக்கை மாநாட்டில் 300பேர்பங்கேற்பது, 2பேருந்து,,8வேன் மூலமாக கலந்துகொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்ட முடிவில் எஸ். சென்னம்மாள் நன்றி கூறினார்.
You must be logged in to post a comment.