செங்கம் ரிஷபேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு .

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருள்மிகு ஸ்ரீ அனுமன் அம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் திருக்கோயிலில்பிரதோஷத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.பிரசித்திபெற்ற ரிஷபேஸ்வரர் கோவிலில் நடந்த, பிரதோஷ சிறப்பு பூஜையில், நந்தி பெருமான் மற்றும் மூலவருக்கு, பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர்,தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான திரவியங்களால் அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜை நடந்ததுஊரடங்கு தளர்வு அறிவிப்பால், வழிபாட்டில் பக்தர்கள் பங்கேற்று, சமூக இடைவெளி பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை மகாபிரதோஷம் மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்

உதவிக்கரம் நீட்டுங்கள்..