உச்சிமலை குப்பம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்; சுகாதார அதிகாரிகள் ஆய்வு.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த உச்சிமலைகுப்பம் கிராமத்தில் தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் கௌசல்யா ரவி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய குழு உறுப்பினர் முருகன் ஊராட்சி மன்ற துணை தலைவர் சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரப் பணிகள் நேர்முக உதவியாளர் ராஜேந்திர குமார் தடுப்பூசி முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மேலும் பொதுமக்களிடம் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். செங்கம் வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் உத்தரவின்பேரில் மருத்துவர் ரூபியா முன்னிலையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் உச்சிமலைகுப்பம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தாமாக முன்வந்து தடுப்பூசி ஆர்வத்துடன் செலுத்தி கொண்டனர். ஊராட்சி எழுத்தர் சங்கர், வார்டு உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர் திருமலை, மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

உதவிக்கரம் நீட்டுங்கள்..