
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கணேசர் திருமண மண்டப வளாகத்தில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா புதிய ரோட்டரி சங்க தலைவர் கே.கே.மணிகண்டன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.செங்கம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ரோட்டரி சங்க தலைமை நிலைய துணை ஆளுநர் பெப்சி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, புதிய நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து ரோட்டரி சங்கம் சிறப்பு, மற்றும் சேவை பற்றி பேசினார். செங்கம் ரோட்டரி சங்கத்தின் புதிய தலைவராக கே.கே.மணிகண்டன், செயலாளராக கே.இளங்கோவன் பொருளாளராக ஆர்.தமிழரசன் ஆகியோர் பொறுப்பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பம்சமாக ரோட்டரி சங்கம் சார்பில் மேல் பள்ளிப்பட்டு வட்டார மருத்துவமனைக்கு 2 ஆக்சிசன் செறிவூட்டும் கருவி மருத்துவர் அருள் நாராயணதாஸ் அவர்களிடம் வழங்கினர். மேலும், ரோட்டரி சங்க நிர்வாகிகள் வெங்கடாசலம், சர்தார் ரூஹுல்லா, அண்ணாமலை, ரவிச்சந்திரன், கலியமூர்த்தி , உதயசங்கர் , ரகுபதி, ஜாபர் சித்திக், மற்றும் புதிய உறுப்பினர்களாக சங்கர் மாதவன், செல்வம் , விஜயராஜ், நந்தகுமார், விஜயகுமார், சேகர் ,ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர். பின்னர் புதிய நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் நிகழ்வில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னாள் சங்க நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்
You must be logged in to post a comment.