Home செய்திகள் செங்கம் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரத்திற்கும் மர்ம நபர்கள் தீயிட்டுக் கொளுத்தியதால் பரபரப்பு.

செங்கம் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரத்திற்கும் மர்ம நபர்கள் தீயிட்டுக் கொளுத்தியதால் பரபரப்பு.

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கரி பாளையம் பகுதியிலுள்ள பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் நூற்றுக்கணக்கான புளியமரங்கள் அரசால் வைக்கப்பட்டிருந்தன தற்பொழுது பெங்களூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது நிறைய மரங்கள் மரங்கள் வெட்டப்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது சிலர் சுயலாபத்திற்காக மரங்களை எரிப்பது வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர. செங்கம் அடுத்த பக்கரி பாளையம் பால் கூட்டுறவு கடை அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரத்திற்கும்தீயிட்டுக் மர்ம நபர்கள் கொளுத்தியுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் செங்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தகவல் கொடுத்து மரங்களை தீயை அணைத்தனர். ஆனால் மரங்கள் மரத்தின் உட்புறமாக எரிந்த நிலையில் புகைந்து கொண்டுள்ளது,தற்போது கொரோனா சூழலில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில் ஆக்சிஜன் தரும் மரங்களை கொளுத்து கின்றனர இதனைப்பற்றி செங்கம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் கொடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடும் மர்மநபர்கள் குறித்து புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை ஓரங்களில் உள்ள மரங்களை காத்திட வேண்டும் என்று செங்கம் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com