Home செய்திகள் செங்கம் நகரங்களில் மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

செங்கம் நகரங்களில் மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

by mohan

தடுப்புசி தட்டுப்பாட்டால் தடுப்பூசி முகாம் களில் ஊசி போடுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் நகரப் பகுதிகள் மக்கள் வரிசையாக காத்திருந்து ஆர்வமுடன் செலுத்தி கொண்டனர் எனினும் கிராம மக்களிடம் இன்னும் தயக்கம் காட்டி வருகின்றனர் இதனால் கிராமப் பகுதி தடுப்பூசி முகாம்கள் வெறிச்சோடிக் கிடந்தன.செங்கம் கணேசர் திருமண மண்டப வளாகத்தில் 18 வயது முதல் அனைவருக்கும் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. சிறப்பாக நடைபெற்ற தடுப்பூசி முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. கணேசர் குழும தலைவர் கஜேந்திரன், ரவீந்திரன், கல்வியாளர் சி.மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தார். முகாம்களில் இளைஞர்கள், ஆண்களும், பெண்களும் சமூக இடைவெளிவிட்டு வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஆசிரியர்கள்  பத்திரிக்கையாளர்கள், மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் பொறுப்பாளர் சர்தார் ருஹுல்லா ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டனர். செங்கம் ஒன்றியங்களில் தடுப்பூசி முகாம் பற்றி தொடரா போட்டு ஒலிபெருக்கி மூலமும் மக்களுக்கு உள்ளாட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்து எனினும் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் கிராம மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டவில்லை.

தடுப்பூசி குறித்து அச்சம் உள்ள ஆள் பலர் முகாம் பக்கம் வரவில்லை என கூறப்படுகிறது எனினும் நகரம் மற்றும் விரிவு பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக கூறப்படுகிறது உள்ளாட்சித் துறை சுகாதாரத் துறை ஊழியர் பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கிராம மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் எனினும் நகரப்பகுதிகளில் போல கிராம மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை தடுப்பூசியின் அவசியத்தை கிராம மக்கள் உணர்ந்ததாக தெரியவில்லை.மேலும் செங்கம் நகர் பகுதியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பெருமளவில் ஆசிரியர்கள் இளைஞர்கள் அதிகளவில் தடுப்பூசி செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சுகாதாரத்துறையினர் கிராமப்புற பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com