Home செய்திகள் போளூர் அடுத்த கொம்மனந்தல் ஊராட்சியில் 34 இளைஞர்கள் இரத்த தானம் செய்தனர்.

போளூர் அடுத்த கொம்மனந்தல் ஊராட்சியில் 34 இளைஞர்கள் இரத்த தானம் செய்தனர்.

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கொம்மனந்தல் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 34 இளைஞர்கள் தாமாகவே முன்வந்து இரத்த தானம் வழங்கினார்கள்.இரத்த தான முகாமில் ஆண்ட்டோ என்பவரின் 34 பேர் கொண்ட நண்பர்கள் குழு ஒன்றினைந்து தாமாகவே முன்வந்து சேத்துப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டபிரபு தலைமையில் இரத்த தானம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக கரைப்பூண்டி ஊராட்சி மன்றத் தலைவர் இந்திரா பாலமுருகன் முன்னிலை வகித்தார்.இந்நிகழ்ச்சியில் போளூர் திருவண்ணாமலை கலசபாக்கம் களம்பூர் ஆகிய இடங்களில் இருந்து நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இரத்த தானம் செய்தனர் இரத்த தானம் செய்த இளைஞர்களுக்கு பழச்சாறு வழங்கப்பட்டது.ஆர்வமுடன் இளைஞர்கள் இரத்த தானம் வழங்கியது மிகவும் நன்றிக்கு உரியது என்றும் அதிலும் பல்வேறு இடங்களில் இருந்து நண்பர்கள் ஒன்றினைந்து செயல்படுவது சமூக ஆர்வலர்கள் உருவெடுத்து இதுபோன்ற பல நன்மைகள் செய்ய சேத்துப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டபிரபு நன்றி உரையாற்றினார்.இரத்த தான முகாமில் மருத்துவர்கள் செவிலியர்கள் சிறப்பாக பணியாற்றினார்கள்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com