Home செய்திகள் மேல்பாலூர் கிராமத்தில் தடுப்பூசி முகாம்.ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்

மேல்பாலூர் கிராமத்தில் தடுப்பூசி முகாம்.ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மேல் பாலூர் கிராமத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.கலசபாக்கம் பகுதியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் கலசபாக்கம் வட்டார மருத்துவமனை மற்றும் சுகாதாரத் துறையினர் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை ஈடுபட்டு வருகின்றனர் இதைத்தொடர்ந்து கலசப்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌதம் ராம் உத்தரவின்பேரில் கடலாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மருத்துவ பரிசோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர், மேல் பாலூர் கிராமத்தைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர் . ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜெயப்பிரகாஷ் ஊராட்சி செயலாளர் விஜய்பாபு , ஒன்றிய குழு உறுப்பினர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.முகாமில் தமிழக அரசு ஏற்படுத்தித் தருகின்ற வைரஸ் நோய் தடுப்பு முகாமை பொதுமக்கள் இளைஞர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தும் விதமாக மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com