Home செய்திகள் திருவண்ணாமலை ஆசிரியருக்கு கலைஞரின் முத்தமிழ் விருது;

திருவண்ணாமலை ஆசிரியருக்கு கலைஞரின் முத்தமிழ் விருது;

by mohan

திருவண்ணாமலை டேனிஷ் பள்ளியைச் சேர்ந்த ஆங்கில பட்டதாரி ஆசிரியர் கா.பியூலா கரோலின் என்பதால் 25 ஆண்டுகால சேவையைப் பெற்றுள்ளார். இவர் தமிழ்நாடு பாரத சான்றிதழ் மற்றும் மாநில மற்றும் தேசிய பயிற்சியாளராக உள்ளார். இவரது சேவை காலத்தில் விருதுகள் மற்றும் வெகுமதிகள் ஏராளம்.ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது, ரோட்டரி கிளப் மூலம் நல்லாசிரியர் விருது, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் அவர்களிடம் நல்லாசிரியர் விருது, ஆசிரியர் சங்கத்தின் மூலமாக நல்லாசிரியர் விருது, வேலு நாச்சியாரின் விருது, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடம் 20 ஆண்டுகால சேவை விருது, 10000 சாரணர் மற்றும் விளையாட்டுகள் ஆக இணைத்தமைக்கு தமிழக ஆளுநரிடம் இருந்து ஆளுநர் விருது, முன்னாள் மாவட்ட ஆட்சியர் மதிப்பிற்குரிய கந்தசாமி, கோவிட் ரிலீப் பணிக்கான சேவை விருது, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி துணைவியார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வனிதா ஆகியோர் வழங்கிய சிறந்த சாதனைப்பெண் விருது, வாழ்நாள் சாதனை விருது என பெற்றுள்ளார்.மேலும்,பசுமை வாசல் பவுண்டேஷன், காருண்யம் டிரஸ்ட் மற்றும் ஒளிச்சுடர் சேவா டிரஸ்ட் இணையத்தில் இணைந்து முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு கருணாநிதி அவர்களின் பிறந்த நாளையொட்டி 10.05.2021 முதல் 18.05.2021 நடத்திய பன்முக கலைஞர்களுக்கான கலைஞரின் முத்தமிழ் விருது ஆசிரியர் பிரிவில் சேவையை பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. பல்வேறு விருதுகளை பெற்ற ஆசிரியருக்கு கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், சாரண அலுவலர்கள் , சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com