மேல்பெண்ணாத்தூர் பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்தமேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.மேல்பெண்ணாத்தூர் பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் இணை உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு சமூக இடைவெளியுடன் நடைபெற்றது. நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியர் இரா.ஜெயந்தி தலைமை தாங்கினார். ஆசிரியர் நாராயணன் அனைவரையும் வரவேற்று பேசினார் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கண்ணுப்பிள்ளை மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மீனா சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மேல்பெண்ணாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் பயிலும் சத்துணவு சாப்பிடும் மாணவ மாணவிகளுக்கு உலர் இணை சத்துணவு பொருட்கள் தலைமையாசிரியர் வழங்கினார். செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி ஆலோசனையின் படி, மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜய், மாணவர்களுக்கு உலர் இணை பொருட்கள் சென்றடைகிறதா என ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் மாணவர்கள் பெற்றோர்கள் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பது குறித்து, முக கவசம் அணியும் முறை விளக்கிக் கூறினார். நிகழ்வில் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் பிரேமா வெங்கடேசன், சத்துணவு அமைப்பாளர் ஜெயந்தி , திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.

செங்கம் செய்தியாளர் சரவணகுமார்

உதவிக்கரம் நீட்டுங்கள்..